குழாய் உடைப்பால் சுத்தமல்லி-கோபாலசமுத்திரம் சாலையில் வீணாக வெளியேறும் குடிநீர்

1 week ago 3

*சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பேட்டை : சுத்தமல்லி விலக்கு-கோபாலசமுத்திரம் சாலையில் குழாய் உடைப்பால் வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சிரமத்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை அடுத்த சுத்தமல்லி அருகே தவணைகோயில் பகுதியில் இயங்கி வரும் நீரேற்றும் நிலையத்திலிருந்து குடிநீரானது பம்பிங் செய்யப்பட்டு நரசிங்கநல்லூர், கருங்காடு, தென்பத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

குழாய்கள் செல்லும் வழியில் கோபாலசமுத்திரம் சாலை, சுத்தமல்லி அணைக்கட்டுக்கு செல்லும் பகுதி அருகேயுள்ள பாலப்பகுதியில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு வீணாக குடிநீர் வெளியேறி குளம் போல் தேங்கி கிடக்கிறது. அவ்வழியாக சாலையில் செல்லும் வாகனங்கள் பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சேற்றை வாரி இறைத்தபடி செல்கின்றனர்.

இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் தேங்கியுள்ள தண்ணீரில் சறுக்கி விழுந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குழாய் உடைப்பால் சுத்தமல்லி-கோபாலசமுத்திரம் சாலையில் வீணாக வெளியேறும் குடிநீர் appeared first on Dinakaran.

Read Entire Article