குழந்தையுடன் தாய் மாயம்

1 week ago 3

சேலம், பிப்.1: சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30), கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா(23). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3வயதில் ரவினேஸ்வரன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அனைவரும் படுக்க சென்றனர். நேற்று காலை பார்த்தபோது மனைவி மற்றும் மகன் இல்லாதை கண்டு வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்தார். இருவரையும் பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அழகாபுரம் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் அகல்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

The post குழந்தையுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article