சென்னை: குழந்தை பசங்க இருக்க கூடிய கட்சி என மறைமுகமாக தவெகவை பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பாஜக சார்பில் ஒன்றிய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் மொத்தமாக வரி செலுத்தியவர்கள் மூன்று கோடியே 45 லட்சம் பேர். பத்து ஆண்டுகள் கழித்து 2024 மொத்தமாக நம் நாட்டில் வழி செலுத்தியவர்கள் 7 கோடியே 90 லட்சம் பேர் பத்து ஆண்டுகளில் நாட்டின் உடைய வளர்ச்சியின் காரணமாக 4 கோடியே 45 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்த கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள்.
தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்து தலைவராக இருக்கும் ஒருவர்(தவெக தலைவர் விஜய்யை), பட்ஜெட்டை பார்த்தேன் வழக்கம்போல் ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறது என கூறியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பை பற்றி பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஜிஎஸ்டி கவுன்சிலிங் மீட்டிங் இது இல்லை. உங்கள் கூட இரண்டு பேரை உட்கார வைத்து சரியாக சொல்லி கொடுக்க சொல்லுங்கள். ஜிஎஸ்டி கவுன்சிலிங் மீட்டிங் வேறு பட்ஜெட் வேறு, இவர்களெல்லாம் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்களாம். இதில் ‘சில்ட்ரன்ஸ் விங்’ வேறு. குழந்தை பசங்க இருக்கக்கூடிய கட்சி, என்று விமர்சித்தார்.
The post குழந்தை பசங்க இருக்கக்கூடிய கட்சி: தவெகவை விமர்சித்த அண்ணாமலை appeared first on Dinakaran.