குளிர்கால சரும வறட்சியைப் போக்க!

1 week ago 6

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் பல சரும பிரச்னைள் ஏற்படுவது வழக்கம். அதிலும் வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது பொதுவானது. ஆனால், மழைக்காலங்களிலும் சரும வறட்சி ஏற்படும். மேலும் வேறுவிதமான பல சரும பிரச்னைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு சில பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும் குளிர்காலப் பிரச்னைகளை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை முகம், உடல் முழுக்க தடவி பத்து நிமிடம் வைத்திருந்து பின்னர், வெது வெதுப்பான நீரில் குளிக்க சரும வறட்சியை தடுக்கும். இது மழை காலத்திற்கு மட்டுமில்லாமல் கோடை காலத்திலும் பின்பற்றலாம். இரண்டு பருவகாலத்திற்குமே ஏற்ற டிப்ஸ் இது. இப்படி செய்வதால், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சரும பாதுகாப்புக்கு அவ்வப்போது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியமான ஒன்றாகும். ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை எளிதில் நீக்கலாம். அதற்கு கெமிக்கல் ஃபேஷியலை செய்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் பழங்களை கொண்டு பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளிப் பழம் எப்போதும் சிறந்ததாகும். பப்பாளிப் பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து காய்ந்ததும் கழவி விடவும். இவ்வாறு வாரத்தில் மூன்று முறையாவது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம். சருமம் பொலிவாகவும் இருக்கும்.
உதடு வெடிப்புக்கு தினசரி தேங்காய் எண்ணெயை தடவி வர உதடு வெடிப்பு சரியாகும்.

பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். மழைக்காலத்தில் சேற்றுப் புண் அதிகமாக ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய்ப் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர விரைவில் குணமாகும்.

தொகுப்பு: ரிஷி

The post குளிர்கால சரும வறட்சியைப் போக்க! appeared first on Dinakaran.

Read Entire Article