குளிப்பதற்காக 'ஹீட்டர்' போட்டபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

3 days ago 1

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் தமிழரசன் (12 வயது). இவர், அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6- ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் மதியம் பள்ளிக்கு செல்வதற்காக பாட்டி வீட்டில் உள்ள குளியலறையில் வெந்நீர் போட்டு குளிப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் 'ஹீட்டர்' போட்டு இருந்தார்.

பின்னர் தண்ணீர் சூடாகி விட்டதா? என்பதை அறிய, பாத்திரத்துக்குள் கை வைத்தபோது, தமிழரசன் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article