குலசேகரத்தில் வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

2 weeks ago 2

குலசேகரம், ஜன.23: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. குலசேகரம் வணிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரவி வரவேற்றார். மாவட்ட பொருளர் கோபன், மாநில துணைத் தலைவர்கள் அலெக்சாண்டர், கார்த்திகேயன், மாநில இணைச் செயலர் விஜயன், குலசேகரம், வணிகர் சங்க தலைவர் பிரதீப்குமார், துணைத் தலைவர் முருகபிரசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி புதுக்கடை தொழில் வர்த்தக சங்கத்தில் மாநில தலைவர் விக்ரமராஜா பங்கேற்கும் மாவட்ட மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட கிளை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜயகோபால், ஜெகபர் சாதிக், விஜி, சசிதரன், சுரேஷ், வில்சன், குமார், ரகு, சந்திரன், ஹரிகுமார், சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில இணைச் செயலர் விஜயன் நன்றி கூறினார்.

The post குலசேகரத்தில் வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article