குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

4 months ago 26

தென்காசி: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாததால் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யாமல் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது. மதியம் ஆம்பூர், பொட்டல்புதூர், கடையம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Read Entire Article