குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது : ஐகோர்ட் அதிரடி

1 week ago 4

சென்னை : குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது என்று ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி, உள்துறை அமைச்சகம், 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிஷோர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல.

ஆகவே கிஷோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். மேலும், பொது பாதுகாப்பு, பொது அவசரம் காரணமாக தனிநபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். ஆனால், இந்த வழக்கில் பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதும் சம்பந்தப்படவில்லை. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி, குற்றச்செயல்களை தடுப்பது போன்ற விவகாரங்களில் மட்டும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதியளிக்க முடியும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article