குற்ற சம்பவங்களை தடுக்க 46 சிசிடிவி கேமரா

1 month ago 10

பெரும்புதூர், அக்.5: பெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க ₹40 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ள 46 சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் திறந்து வைத்தார். பெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை விதிகளை மீறும் நபர்களை கண்காணிக்கவும் தனியார் நிறுவனம் சார்பில் ₹40 லட்சம் மதிப்பீட்டில் பேரம்பாக்கம் – தண்டலம் சாலை, மண்ணூர் காட்டு கூட்டுச்சாலை முதல் செட்டிப்பேடு பகுதி வரை 46 ஏஎன்பிஆர் மற்றும் ஐபி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு, பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை பெரும்புதூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று பெரும்புதூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் பெரும்புதூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கலந்துகொண்டு, ₹40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில், ஹுன்டாய் குளோவிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போயங் சு கிம், பெரும்புதூர் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், காவல் துறையினர் மற்றும் ஹூண்டாய் குளோவிஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post குற்ற சம்பவங்களை தடுக்க 46 சிசிடிவி கேமரா appeared first on Dinakaran.

Read Entire Article