திருச்சி, ஜன.30: சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி கொட்டப்பட்டில் மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மண்டல அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகத்துடன் கூடிய பயிற்சி மைய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பான விழா திருச்சி கொட்டப்பட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தினை பார்வையிட்டார். துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்கள், இருவேறு இடங்களில் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இதனால், அரசு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு மீனவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இக்குறையை நீக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர். உதவி இயக்குநர் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் கீழ்கண்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரைதளத்தில் உதவி இயக்குநர் அலுவலகம், முதல் தளத்தில் துணை இயக்குநர் அலுவலகம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் கூட்ட அறை, அலுவலக அறை உணவுக்கூடம், பதிவு அறை மற்றும் கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் விருந்தினர் அறை மற்றும் கூட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு அலுவலகங்கள் ஒரே கட்டடத்தில் அமைவதால் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அரசின் நலத்திட்டத்தின் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெற்று பயனடைவார்கள். அரசுக்கும் இரண்டு கட்டிடங்களுக்கான தனியாருக்கு வாடகை செலுத்தும் கூடுதல் செலவு தவிர்க்கப்படும். ஏறு தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1577 சமீ ஆகும். இந்நிகழ்வில், மீன் வளத்துறை மண்டல துணை இயக்குநா் ரவிச்சந்திரன், மீன் வளத்துறை செயற்பொறியாளா் ராஜ்குமார், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், மீன் வளத்துறை உதவி இயக்குநா் குமரேசன், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
The post குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும் திருச்சி கொட்டப்பட்டில் மீன் வளத்துறைக்கு ₹4 கோடியில் புதிய கட்டிடம் appeared first on Dinakaran.