கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுண்ணாம்புக்குளம் பகுதிக்கு தனி மின்மாற்றி: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

3 days ago 2

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்வாரியத் துறை அதிகாரிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக அலகு 4ல் எளாவூர் பீடரில் இருந்து பெரிய ஒபுளாபுரம், நாகராஜ் கண்டிகை, காய்லர்மேடு, சரண் ப்ளைவுட், சின்ன ஒபுளாபுரம், சில தொழிற்சாலை பகுதி, பெத்திகுப்பம், எளாவூர், நரசிங்கபுரம், தலையாரிபாளையம், காட்டுகொள்ளை மேடு, மெதிபாளையம், சாலையான் கண்டிகை, வெட்டுக்காடு, வல்லம்பேடு குப்பம், பெரிய குப்பம், மூலரோடு, எளாவூர், முல்லைவாயில்மேடு பல்வேறு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட சுண்ணாம்புக்குளம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அடிக்கடி மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.ரவியின் ஏற்பாட்டில் மேற்கண்ட சுண்ணாம்புக்குளம் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தனி மின் மாற்றி அமைத்துத்தர வேண்டுமென டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார்.

அதன்பின்பு சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மின்வாரிய பொறியாளர் உதவி செயற்பொறியாளர் அதிகாரிகள் சுண்ணாம்புக்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனி பீடரை கொண்டு செல்லும் பணி சுமார் ஒரு ஆண்டுகளாக நடைபெற்றது. இப்பணி ஒரு வாரத்திற்கு முன்பு நிறைவடைந்தது. பின்னர் இரண்டு நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் தலையாரிபாளையம், சுண்ணாம்புக்குளம், ஓபசமுத்திரம் வரை எந்த மின்னழுத்தம் இல்லாமல் மின்சாரம் குடியிருப்பு பகுதிகளுக்கு சீராக சென்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டு சுண்ணாம்புக்குளத்திற்கான தனி மின் மாற்றியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

The post கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுண்ணாம்புக்குளம் பகுதிக்கு தனி மின்மாற்றி: எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article