புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கடந்த 29ம் தேதி நடந்த மவுனி அமாவாசை புனித நீராடலின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் அரசு அதனை மறைப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ எம்பி ஹேமா மாலினி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கும்பமேளாவிற்கு சென்றிருந்தோம். நாங்கள் நன்றாக நீராடினோம். அனைத்தும் சரியாக நிர்வகிக்கப்பட்டது. அந்த சம்பவம் நடந்தது சரிதான். அது மிகப்பெரிய சம்பவம் இல்லை. அது எவ்வளவு பெரியது என்பது எனக்கு தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகின்றது. அனைத்தும் சரியாக நிர்வகிக்கப்பட்டு இருந்தது. எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டது. இவ்வளவு பேர் வருகிறார்கள். இதனை நிர்வகிப்பது மிகவும் கடினம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள் என்றார்.
The post கும்பமேளா கூட்டநெரிசல் மிகைப்படுத்தப்படுகிறது: பாஜ எம்பி ஹேமா மாலினி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.