கும்பகோணம், மே 25: கும்பகோணம் மாநகர் பகுதிகளில் வருகிற 27ம் தேதி மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் வருகிற 27ம் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் கும்பகோணம் மாநகர் முழுவதும் மற்றும் கொரநாட்டுகருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் மாநகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கும்பகோணம் மாநகர் பகுதிகளில் 27ம் தேதி மின் நிறுத்தம் appeared first on Dinakaran.