கும்பகோணம், மே 10: கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சாரங்கபாணி, சக்கரபாணி சுவாமிகள் தங்க மங்களகிரியில் வீதி உலா நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சாரங்கபாணி, சக்கரபாணி சுவாமிகள் தங்க மங்களகிரியில் வீதி உலா புறப்பாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கடந்த ஒரு வார காலமாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏழாம் திருநாளான நேற்று முன்தினம் இரவு தங்க மங்களகிரியில் சாரங்கபாணி உபநாச்சியாளர்களுடன், சக்கரபாணி தனியாகவும் ஒரே நேரத்தில் வீதி உலா நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதியில் இரு ந்து புறப்பட்ட வீதி உலா சாரங்கபாணி தெற்கு வீதி, ராமசாமி கோவில் தெரு, பெரிய கடைவீதி, வழியாக இரவு கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் சாரங்கபாணி கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post கும்பகோணம் சக்கரபாணி சுவாமிகள் தங்க மங்களகிரியில் வீதி உலா appeared first on Dinakaran.