கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 months ago 11

 

கும்பகோணம், டிச.17: கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு முனை சந்திப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் ஆதி திராவிடர் நலத்துறை மாணவர் விடுதியின் அடிப்படை வசதியை சரி செய்து தர வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகுல் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் பரசுராம், கிளை துணை தலைவர் ரகுராமன் மற்றும் கிளை உறுப்பினர்கள் ஆகாஷ், ஆர்யா, ராகவன், சுதர்சன், சஞ்சய், சுபாஷ், விஜய், ருத்ரகுமார், விஷ்ணுவரதன், பிரவீன்குமார், நவீன்குமார், ரஞ்சித், சிவனேசன், சத்தியசீலன், மூவேந்தன், சத்தியமூர்த்தி, அசித்திரன் மற்றும் ஆதித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

The post கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article