கூடலூர் : குமுளி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரள மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வழிகளில் ஒன்றான குமுளி அருகே தேக்கடியில் பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, யானை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில், தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில், கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட குமுளி அருகே, 4ம் மைல் பகுதியில் மான் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கம்பம் மேற்கு வனச்சரக வனவர் ரகுபதி தலைமையிலான வனத்துறையினர் மான் இறந்து கிடந்த பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, புலியால் மான் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
மேலும், குமுளி 4ம் மைல் பகுதியில் புலி நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
There is a tiger in Kumuli are : Forest department issues warning to the public
The post குமுளி பகுதியில் புலி இருக்கு… உஷார் : பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.