குமரிக்கல்பாளையத்தில் அமைய உள்ள துணை மின்நிலைய திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

1 month ago 5

 

திருப்பூர், அக்.18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தலைமை வகித்தார். இதில் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ள 765 கிலோ வாட் உயர்மின் கோபுரம் திட்டத்தை சாலை ஓரமாக புதைவடமாக அமைக்க வேண்டும். குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள நடுக்கலையும், அதைச் சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தாக பகுதியாக அறிவிக்க வேண்டும்‌.

அதற்கு இடையூறாக அமையவுள்ள துணைமின் நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் மற்றும் குமரிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து விட்டு சென்றனர். ஆனால், ஆய்வு அறிக்கையினை வெளியிடாமல் மத்திய மாநில அரசின் தொல்லியல் துறைகள் காலதாமதம் செய்வதாகும் அதன் அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

The post குமரிக்கல்பாளையத்தில் அமைய உள்ள துணை மின்நிலைய திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article