குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு

4 weeks ago 6

நாகர்கோவில், டிச.19: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் சாரல் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. நேற்று பகல்வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. இரவில் பெய்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 17.2 மி.மீ மழை பெய்திருந்தது. மயிலாடி 6.2, நாகர்கோவில் 5.2, பூதப்பாண்டி 7.4, தக்கலை 6, இரணியல் 2.8, மாம்பழத்துறையாறு 7, ஆனைக்கிடங்கு 6.2, சிற்றார்-1ல் 10.2, சிற்றார்-2ல் 6.8, களியல் 5.2, குழித்துறை 6.4, பேச்சிப்பாறை 10.6, பெருஞ்சாணி 8.6, புத்தன் அணை 7.8, சுருளோடு 6.2, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 1.8 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.12 அடியாக இருந்தது. அணைக்கு 951 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 610 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 57.03 அடியாகும். அணைக்கு 340 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.33 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 14.43 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 15.7 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 52.17 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.9 அடியாகும்.

The post குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article