''குபேரா'' - புதிய சாதனை படைத்த தனுஷ்

2 weeks ago 5

சென்னை,

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் பான்-இந்தியா படமான ''குபேரா'', நேற்று முன்தினம் (ஜூன் 20) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு நட்சத்திரம் நாகார்ஜுனா மற்றும் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்றது.

இது அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரதிபலித்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தனுஷ் படம் என்ற சாதனையை ''குபேரா'' பதிவு செய்திருக்கிறது.

முன்னதாக தனுஷ் நடித்திருந்த ''ராயன்'' படத்தின் ரூ. 23.46 கோடி வசூலை முறியடித்து ''குபேரா'' இந்த புதிய சாதனையை படைத்திருக்கிறது.

Read Entire Article