குன்னூரில் பரபரப்பு; வீட்டின் முன் நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

3 weeks ago 6


குன்னூர்: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து, வளர்ப்புநாயை வேட்டையாட சிறுத்தை முயன்றது. ஆனால், நாய் லாவகமாக தப்பியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வைலராகி வருகிறது. இது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கரடிகள் நடமாட்டங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தைகளின் அச்சுறுத்தலால் பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுத்து வரும் சிறுத்தைகள், இரவு நேரங்களில், அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, வீட்டின் வெளியே இருக்கும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வைத்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் அருகே தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு புகுந்த சிறுத்தை ஒன்று, ஒரு வீட்டின் முன் இருந்த வளர்ப்பு நாயை துரத்தி, துரத்தி வேட்டையாட முயன்றது. நாய் குரைத்துக் கொண்டே சிறுத்தையிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் லாவலகமாக தப்பியோடியது. பின், செடிகளிடையே மறைந்திருந்த சிறுத்தை, வீட்டின் உரிமையாளர் மின்விளக்கை ஒளிரவிட்டதும் ஓடி மறைந்தது. சிறுத்தையிடம் சிக்கிய நாய் உயிருக்கு போராடிய காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வரும் சிறுத்தையால் இப்பகுதி பொதுமக்களிடம் பீதியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post குன்னூரில் பரபரப்பு; வீட்டின் முன் நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article