குன்னம் அருகே 130 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

1 month ago 9

 

குன்னம், அக். 10: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வயலப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன், மற்றும் அவரது குழுவினர் நடத்திய சோதனையில் வயலப்பாடி கிராமத்தில் ராமலிங்கம் மகன் பாண்டியன் (40) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட 70 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாண்டியனை விசாரணை செய்ததில் அவர் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கரும்பாயிரம் என்பவரிடம் வாங்குவதாக கொடுத்த தகவலின்படி ஓலைப்பாடி பிரிவு ரோட்டில் காரில் சென்றுகொண்டிருந்த கரும்பாயிரத்தை பிடித்து காரை சோதனை செய்ததில் அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் காரின் பின் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து ரூ 1,30,000 மதிப்புள்ள 130 கிலோ குட்கா பொருட்களை பயிமுதல் செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய செகுசு காரையும் பறிமுதல் செய்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

The post குன்னம் அருகே 130 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article