சென்னை: குத்தம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து துறைச் சார்ந்த அரசு உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலுள்ள சிஎம்டிஏ அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் ஷெனாய் நகர் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கூடுதல் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் பிரகாஷ், போக்குவரத்து ஆணையர், முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சமீரன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, கும்டா சிறப்பு அலுவலர் ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்., மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சாவித்திரி தேவி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.