குண்ணத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய கோயில் குளம் சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்ப்பார்ப்பு

2 days ago 2

பெரும்புதூர், ஜன.30: பெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில்  பூவாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த, கோயிலையொட்டி சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சிறுக சிறுக ஆக்கிரமிப்பு செய்யபட்டு குறுகிய குளமாக மாறியுள்ளது. மேலும், குளத்தின் அருகில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக குளத்தில் கலக்கிறது. கால்நடைகளின் கழிவுகளை குளத்தில் கொட்டி வருவதால், குளத்து நீர் மாசடைந்து, தற்போது கழிவுநீர் குட்டையாக மாறி பாசிபடர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ பூவாத்தம்மன் கோயில் குளம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. இக்குளத்தில் குப்பையினை கொட்டி எரித்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால், இக்குளத்து நீர் மாசடைந்ததை தொடர்ந்து, இப்பகுதி பொதுமக்கள் குளத்து நீரை பயன்படுத்துவதை நிறுத்தினர். தற்போது, கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலையில் இக்குளம் மாறியுள்ளது. இதனால், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, கழிவுநீர் கலந்து பாசிப்படர்ந்து காணப்படும் குளத்தை, தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குண்ணத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய கோயில் குளம் சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article