கூடலூர், பிப். 10: கூடலூரில் இருந்து தேவர் சோலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 3வது மைல் பகுதியில் வளைவான சாலை பகுதி சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
கூடலூர் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து, பல மாதங்களாக அவை பராமரிப்பின்றி காணப்படுகின்றன. பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளால் வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. வரும் மழைக்காலத்துக்கு முன்பாக சேதமடைந்துள்ள சாலைகளை தரமான முறையில் பராமரிக்க மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.