குண்டு காயத்திற்கு பேண்டேஜ்: பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து

1 week ago 1

புதுடெல்லி,

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று (பிப்.1) காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பீகாருக்கான பட்ஜெட் போல இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவைப்பட்டது, ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.

Read Entire Article