குண்டர் சட்டத்தில் 3பேர் கைது

1 month ago 11

நெல்லை, அக். 5: தேவர்குளம் அருகே மூவிருந்தாளி, தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் முத்தையா(46). சுப்பையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மைதிலியன்(22) ஆகிய இருவரும் கஞ்சா விற்க பதுக்கி வைத்திருந்த வழக்கில் தேவர்குளம் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் கடங்கநேரி, வெங்கடேஷ்வரபுரத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் ரதீஷ்(34). இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கஞ்சாவை விற்பதற்காக பைக்கில் வந்தபோது சந்தேகத்தின் பேரில் அவரை மானூர் போலீசார் சோதனையிட்டு வழக்குப்பதிந்து கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து முத்தையா, மைதிலியன், ரதீஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி நெல்லை எஸ்பி சிலம்பரசன், மானூர், தேவர்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்தையா, மைதிலியன், ரதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

The post குண்டர் சட்டத்தில் 3பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article