குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

1 week ago 5

* பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கியவுடன், அதன் மேல் தோல் சீவிய பச்சை உருளைக்கிழங்கினால் அழுத்தித் தேய்த்தால் வெகு நாட்கள் பளபளப்பு மாறாமல் இருக்கும்.
* நைலான் கயிறு வாங்கினால் சோப்பு நீரில் நனைத்து பிறகு உபயோகித்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்.
* கிச்சனில் ஈ தொல்லை அதிகமா? வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை ஈ இருக்கும் இடத்தில் தெளித்தால் போதும்.
* எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரத்தில் உப்பு கலந்து கொதிக்க வைத்த நீரை ஊற்றி ஊற வைத்துக் கழுவினால் பாத்திரம் பளிச்சிடும்.
* உப்பு பாத்திரத்தின் அடியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரைப் போட்டு அதன் மேல் உப்பு கொட்டி வைத்தால் நீர் கசியாமல் இருக்கும்.
* மிக்ஸியில் தேங்காய் அரைக்கும் போது, உப்பையும் சேர்த்து அரைத்தால் தேங்காய் திப்பியில்லாமல், அம்மியில் அரைத்தது போல வெண்ணெய் மாதிரி இருக்கும்.
* கிச்சனில் எறும்புத் தொல்லையா? மஞ்சள் தூளை தூவி விடுங்கள். எறும்பு ஓடியே போகும்.
* வெது வெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு ஊறவைத்து, அந்த நீரால் கிச்சனை துடைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது.
* காபி ேமக்கரை கழுவும் போது நீருடன் எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் விட்டு பின்பு ஸ்விட்சை ஆன் செய்தால் படு சுத்தமாகும்.
* புது பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை பிய்க்க முடிய வில்லையா? அதன் பசை நீங்க ஸ்டிக்கர் மீது சமையல் எண்ணெய் இரண்டு சொட்டு விட்டு விரலால் தேய்த்து எடுக்கலாம்.
* பூண்டு உரித்தவுடன் கைகளில் வாடை அடிக்கும். இதைப் போக்க காபித் தூளை கைகளில் பூசி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் வாடை இருக்காது.
* பாத்திரங்களை துலக்கியவுடன், மெல்லிய துணியினால் துடைத்து ஈரமில்லாமல் வைத்தால் புள்ளிகள் விழாமல் இருக்கும்.
* உபயோகித்த குக்கர் (ரப்பர்) வளையங்களை எறியாமல் குளியல், சமையல் அறையில் ஆணியில் தொங்க விட்டால் துணிகளை மாட்டிக் கொள்ளலாம்.
– அ.யாழினி பர்வதம்

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள் appeared first on Dinakaran.

Read Entire Article