குட்கா கடத்தி வந்தவர் கைது: கார் பறிமுதல்

2 months ago 9

கரூர், நவ. 14: கரூர் காவல் நிலைய சரகம் ஈரோடு சாலை குட்டக்கடை அருகே நேற்று அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் 147 கிலோ இருப்பதை கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த காரை ஓட்டி வந்த தேவராஜ் (42) என்பவரை கைது செய்து போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிறப்பாக பணியாற்றி குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரோந்து காவலர்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார். தொடர்ந்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வது தெரியவந்தால் 9442149290 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குட்கா கடத்தி வந்தவர் கைது: கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article