'குட் பேட் அக்லி': வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம்

6 months ago 42

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

சமீபத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் விடாமுயற்சி. மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

Read Entire Article