ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், பல்கேரியா மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், படப்பிடிப்பின் ஒரு சில அப்டேட்டுகளை அஜித் மற்றும் படக்குழுவினர் அவ்வப்போது கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமாருடன் யோகி பாபு புகைப்படம் எடுக்கும் போது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.