'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

1 month ago 12

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் குறைவின்றி இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, வருகிற மே மாதம் 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Read Entire Article