'குட் பேட் அக்லி' படத்தால் நிறைவேறிய கனவு - மனம் திறந்த நடிகர் பிரசன்னா

3 months ago 23

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தானும் நடித்துள்ளதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசன்னா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நடிகர் அஜித்குமாரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகியுள்ளது. மங்காத்தாவிலிருந்து அஜித் சாரின் ஒவ்வொரு படம் அறிவிக்கப்படும்போதும் நானும் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல் நிறைய நடந்தது. ஆனால் இறுதியாக 'குட் பேட் அக்லி' திரைப்படம் மூலம் என்னுடைய விருப்பம் நிறைவேறியுள்ளது.

கடவுள், அஜித் சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவிஸ் மற்றும் அஜித் சாரின் படத்தில் நான் இருக்க வேண்டும் என விரும்பியவர்கள் அனைவருக்கும் நன்றி. குட் பேட் அக்லி படத்தில் எனது சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. என்னால் இதற்குமேல் இப்போது எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article