செய்யூர், ஜன.19: செய்யூர் அடுத்த சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஹாசினி (14). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை பாபு தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை ஆலம்பரை குப்பத்தை ஒட்டியுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற ஹாசினி கடலில் மூழ்கி மாயமாகி விட்டார். இதை அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கடலோர காவல் படையினர் மற்றும் சூனாம்பேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மற்றும் சூனாம்பேடு போலீசார் கடலில் மூழ்கி மாயமான ஹாசினியை படகுகள் மூலம் தேடினர். நீண்ட நேரமாகியும் அவர் கிடைக்காததால், 2வது நாளான நேற்றும் சிறுமியை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், காணாமல் போன தங்களின் மகளை விரைந்து மீட்டுத் தரக்கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 2வது நாளாக கடற்கரையோரம் காத்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post குடும்பத்தோடு கடலில் குளித்த மாணவி மாயம்: 2வது நாளாக தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.