குடும்பத்தினருடன் "கனிமா" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

1 week ago 5

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த தேதியில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆன பாடல் என்றால், அது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற 'கனிமா' பாடல்தான். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் பாடலான கனிமா பாடலுக்கு மேடையில் அவருடைய மகன், மகள் ,மனைவியுடன் இணைந்து நடனமாடினார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ARMurugadoss & his Family Dancing for 'Kanimaa' songSo cute ♥️pic.twitter.com/CEK3Xuf7ze

— AmuthaBharathi (@CinemaWithAB) June 16, 2025
Read Entire Article