அவிநாசி, மே 20: அவிநாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்குடியிருப்பு அருகே உள்ள தனியார் தோட்டத்தை மேடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை தொடர்ந்து பெய்த கனமழையால் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து, மளிகை பொருள்கள், துணி, உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருள்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளர் செந்தில், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களுக்கு இரவு, காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
The post குடியிருப்புக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.