குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

6 hours ago 4

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் தேரில் எழுந்தருள, தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி வந்தனர். சிலர் தேர்ச்சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேரில் அம்மன் காலடியில் வைத்து வழிபட்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், மாலையில் தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு மீண்டும் நிலையை அடைகிறது.

விழாவின் சிகர நிகழ்வான சிரசு திருவிழா நாளை விமரிசையாக நடைபெறுகிறது. தேரோட்டம் மற்றும்  சிரசு திருவிழாவை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தண்ணீர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article