குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை

13 hours ago 1

சென்னை: குடியரசு தினத்​தையொட்டி சென்னை​யில் காங்​கிரஸார் பாதயாத்​திரை மேற்​கொண்​டனர். நாட்​டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை​யில் தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தலைமை​யில், சட்டப்​பேரவை காங்​கிரஸ் தலைவர் ராஜேஸ்​கு​மார் முன்னிலை​யில் அக்கட்​சி​யினர் பாதயாத்​திரை சென்​றனர்.

ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய்சம்வி​தான் (சட்டம் இயற்றியநாள்) பிரச்​சா​ரத்தை முன்னிலைப்​படுத்​தும் வகையில் சென்னை மணிக்கூண்டு அருகில் இருந்து புறப்​பட்ட பாதயாத்​திரை காங்​கிரஸ் கட்சி​யின் தலைமை அலுவல​கமான சத்தி​யமூர்த்தி பவன் வரை நடைபெற்​றது. பாதயாத்​திரை​யில் காந்தி, அம்பேத்கர் மற்றும் அரசி​யலைப்பை போற்றும் வகையில் காங்​கிரஸ் கட்சி​யினர் பதாகைகள் மற்றும் தேசியக் கொடி ஏந்தி வந்தனர்.

Read Entire Article