குடிபோதையில் மணமகளுக்கு போட வேண்டிய மாலையை நண்பனுக்கு அணிவித்த மணமகன்... அடுத்து நடந்த பரபரப்பு

3 hours ago 1

லக்னோ,

சமூக வலைதளங்களில் சமீபத்தில் திருமணம் குறித்தான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதுதான் உத்தபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த சம்பவம் ஒன்று. உத்தரப் பிரதேச மாநிலம் கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம், பிப்ரவரி 22 -ம் தேதி நடந்துள்ளது. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தார். அப்போது மணமகன், குடிபோதையில் தள்ளாடியபடியே மணமேடைக்கு வந்தார். அப்போதே மணமகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து, குடிபோதையில் இருந்த அந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, தள்ளாடிபடியே பக்கத்தில் இருந்த அவரது நண்பருக்கு மாலை அணிவித்தார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து, மணமகள் இந்த இளைஞரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியோடு தெரிவித்ததால், மணமேடையில் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளின் குடும்பத்தினர், மணமகளை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், திருமண நாளிலேயே இப்படி போதையில் இருந்தால், அவர் வருங்காலத்தில் எப்படி என்னை வைத்து  காப்பாற்றுவார்? என்று கேள்வி கேட்டு துளைத்தார்.

அதுமட்டுமன்றி, மணமகள் நேரடியாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.  மணமகளின் புகாரின் பேரில்,மணமகனின் குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சனை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் கியோல்டியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article