குடிநீர், தெரு விளக்கு புகார்களுக்கு செல்போன் எண்கள் வெளியீடு கலெக்டர் தகவல் வேலூர் மாவட்ட ஊரக பகுதிகளில்

1 day ago 4

வேலூர், மே 23: வேலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 2024-2025 நிதியாண்டிற்கான வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை காலதாமதமின்றி வரும் 25 தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், வேலூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்னை மற்றும் தெருவிளக்கு தொடர்பான பிரச்னைகள் குறித்த புகார்களை ஒன்றியம் வாரியாக தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அணைக்கட்டு-7402903367, குடியாத்தம்-7402903406, கணியம்பாடி-7402903453, காட்பாடி-7402903467, கே.வி.குப்பம்-7402903499, பேரணாம்பட்டு-7402903561, வேலூர்-7402903629 ஆகிய பகுதிகளுக்கு செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் புகார்களை தெரிவித்து தீர்வுகாணலாம், என்றார்.

The post குடிநீர், தெரு விளக்கு புகார்களுக்கு செல்போன் எண்கள் வெளியீடு கலெக்டர் தகவல் வேலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் appeared first on Dinakaran.

Read Entire Article