அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். குஜராத்தின் ஜாம்நகரில் விமானப்படையில் இருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானிகள் விமானத்தில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம், சுவர்தா கிராமத்தில் திறந்த வெளி மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
The post குஜராத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி பலி, ஒருவர் காயம் appeared first on Dinakaran.