குஜராத்தில் புல்லட் ரயில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலி

2 months ago 12

ஆனந்த்: மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் வசாத் கிராமத்தில் கட்டுமான தளத்தின் தற்காலிக கட்டிடம் அமைந்துள்ளது. வதோதரா அருகே மாஹி ஆற்றின் அருகே இந்த இடம் உள்ளது.

அந்த பகுதியில் கிணறு அடித்தளப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களில் 2 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியாகி விட்டார். மற்ற 2 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

The post குஜராத்தில் புல்லட் ரயில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article