குஜராத்தில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 4-ஆக பதிவு

2 months ago 15

காந்தி நகர்,

குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து தென் மேற்கே 26 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு 8.18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

முன்னதாக கடந்த 2001 ஜனவரி 26ம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article