குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை கைவிடுவது ஏன்? - விஜய் கேள்வி

1 month ago 13

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்றும், இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகள் கச்சத்தீவை குத்தகைக்கு பெறவேண்டும் எனவும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்து கடைபிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தவெகவின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி தமிழக அரசை நகர வைத்துள்ளது.

Read Entire Article