சென்னை: கீழடி தொடர்பாக ஓய்வுபெற்ற தொல்லியல்துறை அதிகாரியிடம் அறிக்கை கேட்கிறது ஒன்றிய தொல்லியல்துறை. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்பு:
கீழடியில் 2017ல் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. ஸ்ரீராமன் ஓய்வுபெற்ற நிலையில் கீழடி அகழாய்வு தொடர்பாக அவரிடம் அறிக்கை கேட்பதால் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அமர்நாத் ராமகிருஷ்ணனின் அகழாய்வு அறிக்கையை ஏற்க ஒன்றிய தொல்லியல்துறை மறுத்திருந்தது. இந்நிலையில், அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் ஒன்றிய அரசு கேட்ட நிலையில், ஸ்ரீராமனிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
தொல்லியல்துறை அரசியல் நோக்கத்தில் செயல்படுகிறது
2017ல் கீழடியில் அகழாய்வு செய்த ஸ்ரீராமன், அங்கு ஒன்றுமே இல்லை என்று தெரிவித்ததால் அப்போது அகழாய்வு நிறுத்தப்பட்டது. இந்த ஒன்றிய தொல்லியல்துறையின் நடவடிக்கைக்கு தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் உள்நோக்கத்தோடு தொல்லியல்துறை அறிக்கை கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஒன்றுமே கிடைக்கவில்லை என்று ஸ்ரீராமன் தெரிவித்த பிறகுதான் ஏராளமான பொருட்களை மாநில தொல்லியல்துறை கண்டெடுத்தது. ஏராளமான கலைப்பொருட்கள், செங்கல் கட்டுமானங்கள் வெளிவரத் தொடங்கின.
ஓய்வுபெற்றவரை அறிக்கை எழுத சொல்லும் ஒன்றிய அரசு
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஸ்ரீராமனை வைத்து அகழாய்வு அறிக்கையை எழுதச் சொல்வதில் உள்நோக்கம் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கீழடி இருக்கையை மாற்ற முயற்சி என கண்டனம்
ஸ்ரீராமனை வைத்து வரலாற்று நிகழ்வை ஒன்றிய அரசு திரிக்க பார்ப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர கூறியதாவது; 2014 முதல் 2016 வரை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2 கட்ட அகழாய்வுகளை கீழடியில் நடத்தி முடித்தார். 982 பக்க கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த 2 ஆண்டு கழித்து ஒன்றிய அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கீழடி நாகரிகம் கிமு 8ம் நூற்றாண்டு என அகழாய்வு அறிக்கையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். கீழடி நாகரிகத்தை கிமு 3ம் நூற்றாண்டு என அகழாய்வு அறிக்கையில் மாற்ற ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. கீழடி நாகரிக காலத்தை மாற்ற ஒன்றிய அரசு அழுத்தம் தந்தும் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றவில்லை. அறிக்கையில் உள்ள கீழடி நாகரிக காலம்தான் சரியானது என அமர்நாத் ராமகிருஷ்ணன் உறுதியாக தெரிவித்து இருந்தார் என கூறினார்.
The post கீழடி அகழாய்வு.. ஓய்வுபெற்ற தொல்லியல்துறை அதிகாரியிடம் அறிக்கை கேட்க்கும் ஒன்றிய அரசால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.