கீரைத்துறை பகுதிகளில் குற்றங்களை தடுப்பது குறித்து போலீஸ் விழிப்புணர்வு கூட்டம்

3 months ago 19

 

மதுரை, அக். 7: கீரைத்துறை பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை எப்படி தடுப்பது என்பது குறித்து போலீஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை கீரைத்துறை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வார்டு வாரியாக குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் 89வார்டை போலீசார் தேர்வு செய்தனர்.

இந்த வார்டுக்குட்பட்ட சமுதாயக்கூட அரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சிந்தாமணி பகுதியில் கஜேந்திரபுரம், பர்மாகாலனி, சிந்தாமணிகுறுக்கு சாலை, கண்ணன் காலனி, பொன்னுப்பிள்ளை தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கீரைத்துறை போலீசார் மற்றும் பொதுமக்களுங்கு குற்றங்களை தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தெற்குவாசல் குற்றப்பிரிவு சரக உதவி கமிஷனர் ரமேஷ் தலைமை வகித்து குற்றங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து பேசினார். கீரைத்துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, எஸ்ஐ மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது சிசிடிவி காமிராக்களை பொருத்துதல், சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுத்தல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்துவது, ரவுடிகளை கட்டுக்கொண்டு வருதல் மற்றும் உள்ளூரில் நிலவி வரும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

The post கீரைத்துறை பகுதிகளில் குற்றங்களை தடுப்பது குறித்து போலீஸ் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article