கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மிலன் அணி வெற்றி

5 hours ago 2

வாஷிங்டன் ,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி ) - ரிவர் பிளேட் (அர்ஜென்டினா) அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இன்டர் மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Read Entire Article