கில், சாய் சுதர்சன் அரைசதம்.. லக்னோவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த குஜராத்

1 week ago 4

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கேப்டன் சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. சுப்மன் கில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே சாய் சுதர்சனும் (56 ரன்கள்) அவுட்டானார்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (2 ரன்கள்), பட்லர் (16 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் குஜராத் அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் லக்னோ பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தினர்.

இறுதி கட்டத்தில் ரூதர்போர்ட் (22 ரன்கள்) ஷாருக்கான் (11 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ களமிறங்க உள்ளது.  

Read Entire Article