கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திருப்பத்தூர் எல்லைகளில் உள்ள குறும்பேரி உடைந்ததால் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டியில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள குறும்பேரி ஏரியில் அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி, ஆண்டியூர் பகுதிகளில் காட்டாறு வெள்ளம் ஏற்பட்டது.
மகனூர்பட்டியில் மேம்பால வேலைகள் காரணமாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகள் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டன. இதனால் திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலை மூடப்பட்டு பொதுமக்கள் மாற்று வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
The post கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டியில் காட்டாறு வெள்ளம்: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் appeared first on Dinakaran.