கிரிக்கெட்டிலிருந்து இடைவேளை எடுக்கும் வங்காளதேச முன்னணி வீராங்கனை.. காரணம் என்ன..?

1 day ago 1

டாக்கா,

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஹானாரா ஆலம் (வயது 31) மனநலப் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து 2 மாத காலம் இடைவேளை எடுப்பதாக கூறியுள்ளார். இவரது முடிவை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவர் வங்காளதேச அணிக்காக 52 ஒருநாள் மற்றும் 83 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான வங்காளதேச அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

Read Entire Article