டாக்கா: டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. ஷைன்புகூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முகமதின் அணி பீல்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் தமிம் இக்பாலுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவரை உடனடியாக டாக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பட செய்யப்பட்டது. தமிமின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாது எனத் தெரிவித்த மருத்துவர்கள் மைதானத்திற்கு அருகே உள்ள மருத்துமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை அடுத்து மைதானத்துக்கு விரைந்து சென்ற மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் விமானம் மூலம் தமிமை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் பாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது வங்கதேச அணி வீரர் தமிம் இக்பாலுக்கு திடீர் நெஞ்சுவலி! appeared first on Dinakaran.